நடிப்பு அரக்கனை தளபதி 67 படத்தில் இணைத்த லோகேஷ்.! லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை கண்டு வருகிறது. இதனால் விஜய்யும் சரி படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

ஏன் அண்மையில் கூட ஹைதராபாத்தில் ஒரு சின்ன பார்ட்டி வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் சைலண்டாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை துளி கூட கசிய விடாமல் படக்குழு வேலை பார்த்து வருகிறது.

இருப்பினும் ஒரு சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே தான் இருக்கின்றன அதன்படி இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது மேலும் விஜய்க்கு இணையான பல டாப் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. அதன்படி மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய்தத் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில்..

தற்பொழுது தளபதி 67 படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படம் லீக் ஆகி உள்ளது அதில் ஒரு முக்கிய பிரபலம் இருப்பதால் தளபதி 67 படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது ஆம் நடிப்பிற்கு பெயர் போன சியான் விக்ரம் தளபதி விஜயை கட்டி அணைத்து இருக்கும் புகைப்படம் தான் அது.

எனவே தளபதி 67 திரைப்படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது இதனால் இந்த படத்திறப்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் விக்ரமுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்களின் நடிக்க வைக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vikram
vikram

Leave a Comment