ஓவர் கான்ஃபிடன்ஸ் உங்களை ஆட்டம் காண வைக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு அறிவுரை கூறிய முன்னாள்வீரர்.

இந்தியாவில் சமீபகாலமாக நடத்தப்படும் ஐபிஎல் தொடர் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது தற்போது 13 சீசன்கள் முடிவுற்ற நிலையில் 14-ஆவது சீசன் இன்று தொடங்க உள்ளது.

இன்றைய  போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த அணியாக தற்பொழுது பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஏன் என்றால் அதில் இருக்கும் 11 வீரர்களும் மேட்ச் வின்னர்களாக இருப்பதால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதில் சமாளிக்கிறார்கள்.

இந்த தடவையும் தனது முழு பலத்துடன் இறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதை தவிர்த்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சிலும், பில்டிங்கிலும், பேட்டிங்கிலும் சமமாக இருக்கின்றது

இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் (ojha) மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வழக்கம்போல இந்த தொடரிலும் போதிய பலத்துடன் வலுவாக இருக்கிறது.

எந்த ஒரு அணியும் அவ்வளவு எளிதில் விழ்த்த முடியாது ஏனென்றால் சரியான பலத்துடன் இருக்கிறது. இந்த ஆண்டு ஏலத்தில் கூட தேவையில்லாமல் வீரர்களை எடுக்காமல் தனக்கான வீரர்களை சரியாக பயன்படுத்தி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னம்பிக்கை இருக்கிறது ஆனால் அதே அதீத் தன்னம்பிக்கை அவர்களை தடுமாறச் செய்யும்.

அதனால் கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து விளையாட வேண்டும் அதே சமயம் ஒவ்வொரும் உற்சாகத்துடனும் அதேசமயம் களத்தில் என்ன நடக்கிறது என்பதை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என கூறினார்.

Leave a Comment