நெகட்டிவ் இமேஜை உடைக்கும் வகையில் கிடைத்த சிறப்பான விருது.! ஜூலி வெளியீட்ட நெகிழ்ச்சியான புகைப்படம்.!

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் பிரம்மாண்ட பொருட்செலவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் முதல் சீசன் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கமலஹாசனை வைத்து கோலாகலமாக தொடங்கி வைத்தனர். முதல் சீசனில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அதில் ஒருவர்தான் ஜூலி. பிக் பாஸ் முதல் சீசனில் ஜூலி கலந்துகொண்டு தனக்கு தோன்றியவற்றை  வெளிப்படையாக பேசக்கூடியவர். இருந்தாலும் மக்கள் மத்தியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியேவும் ஜூலிக்கு பல எதிர்மறை விமர்சனங்களை நேரடியாகவே கூறினர்.

பின்பு பிக்பாஸ் தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் கடைசியாக ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் கமலஹாசன் தொடங்கி வைத்தார் பின்பு சில காரணங்களால் அவர் பாதியில் வெளியேறியதை அடுத்து சிம்பு பிக் பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி  முடித்து வைத்தார்.

இதில் விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொண்ட சில முக்கிய போட்டியாளர்கள் தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இதில் ஜூலியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் முன்பு ஜூலி மேல் இருந்த இமேஜ் முற்றிலுமாக மாறியுள்ளது.

மேலும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் செவிலியராக பணியாற்றினார். இதனால் இன்று செவிலியர் தினத்தை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனைக்கு ஜூலியை அழைத்திருந்தனர் அங்கு சென்றிருந்த ஜூலி சிறப்புரையாற்றினார் மேலும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

julie
julie

Leave a Comment