36 மில்லியன் ஃபாலோசர்களில் வெறும் 6 பேரை மட்டுமே பின் தொடரும் ஷாருக்கான்.. யார் யார் தெரியுமா?

sharu-khan-1
sharu-khan-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பதான் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற வருகிறது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக பாலிவுட்டில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் சமீப காலங்களாக பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள் மிகவும் மோசமான வரவேற்பை பெற்று வந்தது. எந்த ஒரு படமும் வசூல் ரீதியாக வெற்றியை பெறவில்லை இப்படிப்பட்ட நிலையில் ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படம் வெளியாகுவதற்கு பல பிரச்சனைகள் வந்தது.

இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தினை இயக்கியிருந்தார். மேலும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது இதனை அடுத்து பதான் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிய நிலையில் இந்த படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. அதாவது ஓவர் கவர்ச்சி எனவும் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை படுமோசமாக இருந்ததால் இந்த படம் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் எனவே பதான் படம் ரிலீஸ்சாக் கூடாது என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். எனவே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த பதான் படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியிருக்கும் நிலையில் தற்போது வரையிலும் 900 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் அளித்து வந்த நிலையில் இந்த நேரத்தில் ஷாருக்கானை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் 36 மில்லியன் பேர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் ஆனால் ஷாருக்கான் ஆறு பேரை மட்டுமே பின்பற்றி வருகிறார். அந்த ஆறு பேரும் ஷாருக்கானுக்கு மிகவும் முக்கியமான நபர்கள்.

sharu khan
sharu khan

அந்த வகையில் அவரது மனைவி கவுரி கான், பிறகு ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், அதேபோல் ஷாருக்கானின் மகள் சஹானா கான் இவர்கள் மூவரினையும் அடுத்து ஷாருக்கானின் சகோதரி மகளான அலியா சிபா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தாத்லானி, இவரை அடுத்து நெருங்கிய நண்பர் காஜல் ஆனந்த் உள்ளிட்டவர்களை ஷாருக்கான் பின் தொடர்கிறார்.