ஏகே 62 திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்.. விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.. வெளிவந்த பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் முதலில் போடா போடி என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் எடுத்த நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என அனைத்து படங்களும் வெற்றி படங்கள் தான்..

இதனால் விக்னேஷ் அவனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்த நிலையில்  அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தையும் இவர் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் எல்லாம் வெளிவந்தது முதலில் இவர் சொன்ன ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்தால்  ஓகே சொல்லியது ஆனால் முழு கதை ரெடி செய்து வந்து சொல்லும் பொழுது அந்த அளவிற்கு திருப்தி தராததால்..

அஜித் மற்றும் லைககா ப்ரொடக்ஷன் அவரை Ak 62 படத்தில் இருந்து தூக்கி எறிந்தது இதனால் கடுப்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை  ரிமோவ் செய்தார் அதனைத் தொடர்ந்து  வித்தியாசமான பதிவுகளை போட்டு வந்தார்.

அதையெல்லாம் படித்து பார்த்தால் அஜித்தை தான் அவர் மறைமுகமாக தாக்குவதாக பலரும் கூறினார் இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவன் விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவரிடம் அஜித்தின் படம் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு விக்னேஷ் சிவன் இது தேவையில்லாத ஒரு கேள்வி வேற கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என விக்னேஷ் சிவன் சொல்ல.. மேலும் அடுத்த ரெட் ஜெயண்ட்  தயாரிப்பில் படம் எடுக்கிறீர்களா என கேட்டதற்கு இது  Irrelevant question என சொல்லி பதிலளிக்காமல் சென்றுவிட்டார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Leave a Comment