இந்த வாரம் OTT யில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன மற்றும் எந்தெந்த ஓட்டிட்டு தளத்தில் இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்பதை இங்கே காணலாம்.
ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்க்ஸ் (Strangers Things) இணையத் தொடரின் 5ஆவது சீசனின் 2-ஆம் பாகம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது,
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது,மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் நடித்துள்ள ஹாரர் காமெடி படமான ரஜினி கேங், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்துள்ள “மிடில் கிளாஸ்” திரைப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள திரைப்படம் தான் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’தற்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது,
நிவின் பாலியின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது ‘பார்மா’, இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘பார்மா’ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.