ஆஹா எத பார்க்கலாம்.. எத விடலாம்.. ஒண்ணுமே புரியலையே.! இந்த வாரம் OTT யில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.!

OTT Release this week movie : இந்திய சினிமாவில் ஒரு வாரத்திற்கு அரை டஜன் திரைப்படங்கள் திரையரங்கிற்கு வருகின்றன அதிலும் தமிழ் சினிமாவில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் திரையரங்கில் தான் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்று பார்த்தால் மற்றொரு பக்கம் இன்னும் இரண்டு மடங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் வருகிறது.

அந்த வகையில் போட்டியிட்டு OTT இணையதளங்களிலும் வாரத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன சமீபத்தில் திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படம் கூட OTT வெளியாக இருக்கின்றன இந்த வாரம் மார்க் ஆண்டனி திரைப்படமும் இணையதளத்தில் வெளியாகின்றன.

விஷால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வந்தது இந்த நிலையில் நல்ல வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் ஹாட்ஸ்டார் இல் “மந்தகம்” என்ற வெப் தொடர் அடுத்த சீசன் இன்று முதல் வெளியாகிறது. அதேபோல் அதர்வா விதார்த் நடித்த முதல் சீசன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் இன்று வெளியாகிறது.

மேலும் “த கிரேட் இந்தியன் சூசைட்” என்ற தமிழ் வெப் தொடர் ஆகா Ott இணையதளத்தில் வெளியாகிறது மேலும் ஜெயிலர் விநாயகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காசர் கோல்ட் என்ற மலையாள திரைப்படம் நெட் பிளக்சிலும் “பிரேமா விமானம்” என்ற தெலுங்கு திரைப்படம் ஜீ5 இணையதளத்திலும் “மட்டிக்கதா” என்ற தெலுங்கு திரைப்படம் ஆகா OTT இணையதளத்திலும் “நாகபூஷணம்” என்ற திரைப்படம் ஈ டிவி OTT இணையதளத்திலும் வெளியாகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்