முன்பெல்லாம் தியேட்டரில் எப்பொழுது திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பது மாறி தற்போது எப்பொழுது ஒடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலங்களாக கொரோனா உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் தியேட்டரிலும் எந்த திரைப்படமும் பல மாதங்களாக ரிலிஸ்சாகமல் மூடியிருந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு ஓரளவிற்குத் தளர்வுகளுடன் 50% பார்வையாளர்கள் திரைப்படங்களை பார்ப்பதற்காக திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டது.
அந்த வகையில் விஜய் நடித்திருந்த மாஸ்டர், கார்த்திக் நடித்திருந்த சுல்தான், தனுஷ் நடித்த கர்ணன் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர், விஜய் சேதுபதி நடித்து வரும் இரண்டு திரைப்படங்கள், நயன்தாரா நடித்து வரும் இரண்டு திரைப்படங்கள் என்று இன்னும் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால் தற்பொழுது தியேட்டர் மூடப்பட்டு காலை ஏழு மணியிலிருந்து மாலை 12 மணி வரையும் சில தளர்வுகளுடன் உத்தரவு போடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இதற்குமேல் தியேட்டரில் எந்த திரைப்படமும் ரிலீஸ் செய்ய முடியாது என்பதற்காக விஜய் சேதுபதி, நயன்தாரா, தனுஷ் இவர்களின் திரைப்படங்கள் ஓடிடி வழியாக ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. அந்த வகையில் விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்து வரும் 19 (1) (ஏ ) திரைப்படமும் தமிழில் துக்ளக் தர்பார் போன்ற இந்த இரண்டு திரைப்படங்களும் ஓடிடி வழியாக ரிலீஸ் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் க. பெ.ரண சிங்கம் திரைப்படம் ஓடிடி வழியாக ரிலீஸ் ஆனது.
இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து நெற்றிக்கண் மற்றும் ராங்கி இந்த இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ்சாக உள்ளது. பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இத்திரைப்படம் 17 மொழிகளில் ரிலீஸ்சாக உள்ளது.இதனைத் தொடர்ந்து நடிகர் சிவா நடித்த உள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.