சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் மிகக் குறுகிய கால கட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலையை அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஏனென்றால் இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
அதன் பிறகு ஒரு சில நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்படி படிப்படியாக தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்தார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி அளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆன காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் முதன் முதலில் மெரீனா திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அப்பொழுது சிவகார்த்திகேயன் அனைவரிடமும் பிரபலம் கிடையாது.
அதனால் சிவகார்த்திகேயனை எப்படியாவது ப்ரொமோட் செய்ய வேண்டும் என சிவகார்த்திகேயனை அழைத்துக் கொண்டு ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க கேட்டாராம் இயக்குனர் பாண்டியராஜ். ஆனால் அந்த சேனல் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதால் அவருக்கு இங்கு பேட்டி கிடையாது என கூறி விட்டார்களாம்.
ஆனால் மெரினா திரைப்படத்தில் நடித்த மற்ற பிரபலங்கள் அனைவரும் வந்து பேட்டி கொடுக்கலாம் என அந்த சேனல் கூறியுள்ளது இதனை சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு நேர்காணலில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் நம்ம சேனலுக்கு பேட்டி கொடுப்பாரா என கேட்கும் நிலையில் உயர்ந்து விட்டார்.
அன்று புறக்கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூபம் எடுத்து முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
