ஏ ஆர் முருகதாஸ்ஸின் சொத்து மதிப்பை கண்டு அசந்து போகும் மற்ற இயக்குனர்கள்.! குறுகிய படங்கள் எடுத்தாலும் காசு விஷயத்தில் கரெக்டாக இருக்கிறார் எனக் கூறும் ரசிகர்கள்.

0

திரை உலகில் அசிஸ்சன்ட் இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்து வந்த இவருக்கு நடிகர் அஜித் நல்லதொரு வாய்ப்பை கொடுத்தார் அதை திறம்பட கையாண்ட  எ ஆர் முருகதாஸ் தீனா என்ற ஒரு அற்புதமான படத்தை கொடுத்து தனது கேரியரை வெற்றிகரமாக தொடங்கினார்.

அதன் பிறகு இவர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் விஜயுடன் தொடர்ந்து முக்கியமான படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் கத்தி, சர்க்கார், துப்பாக்கி போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க பேரையும் புகழையும் அதிக அளவில் சம்பாதித்து மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

இவர் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இது மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த கதைகளை பல ஹீரோக்களுக்கு சொல்லி வருகிறார்.

ஒன்னும் ஓகே ஆனா பாடுயில்லை.. இந்த நிலையில் எ ஆர் முருகதாஸ் அவர்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வைரலாகி வருகிறது அதாவது அவரின் சொத்து மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கபடுகிறது இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் திரை வட்டாரங்கள் பக்கத்திலிருந்து இந்த தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.