திருட்டுத்தனமாக பிளாக்கில் விற்கப்படும் மதுபாட்டில் ஒரிஜினலா.? போலியா.? என்பதை கண்டுபிடிக்க டாஸ்மார்க் அதிரடி.!

பி டி ஆர் பழனிவேல் தமிழக நிதித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நேர்காணலில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது தமிழகத்தில் ஆயித்தீர் வரி லீக்கேஜ் மூலம் கடும் இழப்பு ஏற்படுகிறது எனவும் இதன் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது சில தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் தமிழகம் முழுவதும் சுமார் 11 மது உற்பத்தி நிறுவனங்களும் 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மது தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் உற்பத்தி செய்யும் இடம், விற்பனை செய்யும் இடம் வரை மொத்த இடங்களும் கணினி மயமாக்கப்பட்டு  பாட்டில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பார் கோடுகள் மூலம் கண்காணிக்க திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது. அப்படி பார் கோடு மூலம் எந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது எப்பொழுது தயாரிக்கப்பட்டது எந்த கிடங்கில் எத்தனை நாள் இருப்பு வைக்கப்பட்டது எந்த கடையில் விற்கப்பட்டது என அனைத்தும் பார்கோடு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நடைமுறை ஆரம்ப பணிகள் துவங்கப்பட்டு உள்ளது எனவும் இது விரைவில் நடைமுறையாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதனால் கள்ள சந்தையில் விற்பனை செய்யும் மது வகைகள் போலி மதுவா எந்த கடையில் யாரால் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும் அதன்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Leave a Comment