தமிழக மக்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! மீண்டும் உருவாகப்போகும் புதிய புயலால் மக்கள் பீதியில்..!

orange-alert
corange-alert

orange alert to tamilnadu: தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் இரண்டாம் தேதி வரை மிக அதிகமான கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழகம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உருவான நிவர் புயல் தமிழகத்தில் ஒரு ஆட்டத்தை காட்டிவிட்டு சமீபத்தில்தான் கரை கடந்தது இவ்வாறு அந்த புயல் கரை கடந்ததன் பிறகாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வானிலை அறிக்கை ஆய்வாளர்கள் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றால் அவை புயலாக மாற வாய்ப்பு உள்ளது ஆகையால் இதற்கு புரெவி புயல் என பெயரிடப்படும் என வானிலை அறிக்கை அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் கன மழை அல்லது அதிக கன மழை பெய்யாமல் இருப்பின் வானம் இருலோகத்தில் காணப்படும். அதுமட்டுமல்லாமல் இவை புயலாக மாறினால் சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூரை காற்று வீசும் என தெரிவித்துள்ளார்கள்.

இதனால் தற்போது வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அனைவரும் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.