உடம்பை குறைத்து, அழகை காட்டியதும் போதும் குவியும் வாய்ப்புகள் – ஹன்சிகா கையில் இருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா..

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷ், விஜய், ஜெயம் ரவி, சூர்யா, சிம்பு போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தாறுமாறாக உயர்த்தி கொண்டார்.

இருப்பினும் இளம் வயதிலேயே இவர் கொழுக் மொழுக்கென்று இருந்ததால் இவர் ஒரு சில உடைகளை போட முடியாமல் போனது. இதை அறிந்த ரசிகர்கள் இவரை சமூக வலைதள பக்கத்தில்  கிண்டலும், கேலியும் பண்ணினார்கள் . இதை உணர்ந்த பின் நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு சிறிது இடைவெளிவிட்டு ஜிம்மே கதியென கிடந்து உடல் எடையை ஒரு வழியாக குறைத்து சிலிம்மாக மாறி உள்ளார்.

அதை வெளிக்காட்டும் வகையில் நடிகை ஹன்சிகாவும் தொடர்ந்து கடற்கரை ஓரத்தில் பிகினி டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். மீண்டும் சினிமாவுலகில் களமிறங்கியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் 2022 – ல் மட்டும் இவரது கையில் மஹா, பார்ட்னர், 105 mins,  மை நேம் இஸ் சுருதி,  ரவுடி பேபி ஆகிய திரைப்படங்களை தன் வசம் வைத்து இருக்கிறார்.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் தெலுங்கில் வெப் சீரிஸ் ஒன்றிலும் முதல்முறையாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைத்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை ஹன்சிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதனால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் தான் மட்டும் சந்தோஷமாக இல்லாமல் ரசிகர்களுக்கும் விருந்து படைக்கும் வகையில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறார் ஹன்ஷிகா

Leave a Comment