யாரையும் கிண்டல் செய்யவோ, நக்கல் செய்யவோ கிடையாது மனம் திறந்த வாரிசு பட தயாரிப்பாளர்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நடிகர்கள் விஜய், அஜித் இவர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது குறித்து தற்போது ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. அதாவது தற்பொழுது நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திலும் அஜித் துணிவு திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்கள் எனவே திரையரங்கங்கள் ஒதுக்கிடுவதில் பிரச்சனைகள் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வாரிசு, துணிவு இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகளை சரிசமமாக பிரித்து தரலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இருவரும் முன்னணி நடிகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனை அடுத்து வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தில்ராஜ் விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டார்ராக இருக்கிறார் அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார் இரண்டு படங்களும் சமமாக திரையரங்குகளில் வெளியாகுவது சரியா இருக்காது துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாசப்படத்திற்கு அதிக திரையரங்குகளை கொடுக்க வேண்டும் என பேச்ச முடிவெடுத்து இருப்பதாக கூறினார்.

இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்கள் பலரும் கோபப்பட்டனர். எனவே சமீபத்தில் தில்ராஜ் அளித்துள்ள பேட்டியில் மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாகவே இருக்கிறது நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்தி விடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன் ஆனால் அதிலிருந்து ஒரு 20 செகண்ட் மட்டும் எடுத்து போடுகிறார்கள்.

அதற்கு முன்னாடி என்ன பேசுகிறேன் என்று முழுவதும் தெரியாமல் சமூக வலைதளத்தில் வைரல் செய்து விட்டார்கள். அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியும் மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அந்த 20 செகண்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள் ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடு இல்லை சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Comment