விஜய் மனசு வச்சா மட்டும் தான் அது நடக்கும்.! என ஓப்பனாக பேசிய உதயநிதி..

0
vijay
vijay

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஹீரோ என பல முகங்களுடன் மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் உதயநிதி. சினிமா மட்டும் அல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நேரமே இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளை செய்து வரும் உதயநிதி தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஒரு படத்தில் ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான கலகத் தலைவன் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக உதயநிதி பணியாற்றி வருகிறார்.

எனவே இந்த படத்தின் நிகழ்ச்சியின் பொழுது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது எனவே அனைத்திற்கும் தயங்காமல் பதில் அளித்து வரும் நிலையில் அது குறித்து தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பத்திரிகையாளர் ஒருவர் மீண்டும் விஜயின் படத்தை எப்பொழுது தயாரிப்பீர்கள் என உதயநிதியிடம் கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த உதயநிதி எனக்கும் விஜயின் படத்தை மீண்டும் தயாரிக்க ஆசையாக தான் இருக்கிறது.

அதற்கு விஜய் தான் மனசு வைக்க வேண்டும் இவ்வாறு விஜய் ஓகே சொன்னால் நான் அவருடைய படத்தை தயாரிக்க ரெடியாக இருக்கிறேன் மேலும் அவரிடம் வாழ்த்து பெற்ற பிறகு தான் நான் அரசியல் பிரச்சாரத்திற்கு சென்றேன் இதனைத் தொடர்ந்து நான் வெற்றி பெற்றவுடன் என்னை ஃபோனில் அழைத்து வாழ்த்து சொன்னார் நாங்கள் தற்பொழுது நட்பில் தான் இருந்து வருகிறோம் என கூறியுள்ளார் உதயநிதி.

தற்பொழுது விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது மேலும் இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.