சிவகார்த்திகேயனால் மட்டுமே வருடத்திற்கு மூன்று, நான்கு படங்களை கொடுக்க முடியும்.? மற்ற டாப் ஹீரோவால் முடியாது.! ஏன் தெரியுமா..

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா ஆரம்பத்தில் காதல் காமெடி கலந்த படங்களில் நடித்து பின் போகப்போக ஆக்சன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார் ஆனால் இவரது ஆக்சன் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை அதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட சிவக்கார்த்திகேயன்.

இனி ஆக்சன் படங்களை தவிர்த்து விட்டு மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் என்டர்டைன்மென்ட் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மை காலமாக அதிக காமெடி கொஞ்சம் செண்டிமெண்ட் இருக்கும் படங்களில் நடித்து அசதினார்.

அப்படி டாக்டர் டான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் 100 கோடி கிளப்பில் இணைந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயாலன்,  பிரின்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களும்  என்டர்டைன்மெண்ட் படங்களாக இருக்கும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில்  வலைப்பேச்சு அந்தனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் வருடத்திற்கு மூன்று படங்களை கொடுத்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் என கூறினார் ஆம் அவர் தேர்ந்தெடுத்து நடிப்பது என்டர்டைன்மென்ட் சம்பந்தப்பட்ட படங்கள் இந்த படத்தில் அதிக அளவு பஞ்ச் டயலாக், கெட்டப் போன்றவை இருக்காது.

இதனால் இது போன்ற படங்களில் ஈசியாக நடித்து முடித்து விடலாம். சிவகார்த்திகேயன் நினைத்தால் ஒரு வருடத்திற்கு இது போன்ற படங்கள் சுமார் 5, 6 படங்கள் கூட நடிக்கலாம் என கூறினார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆக்சன் ஹீரோவாக நடிப்பதற்கு பதில் அவர் இது போன்ற காமெடி கலந்த என்டர்டைன்மென்ட்  படங்களில் நடித்தால் நன்றாக ஓடும் என கூறினார் .