ஒரே ஒரு போட்டோ.! உலகம் சுற்றும் பெண்ணை ஆச்சரியப்பட வைத்த அஜித்.! அந்த பொண்ணு இப்ப அஜித்தை பத்தி என்ன சொல்லுச்சி தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசைக்க முடியாத இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இப்பொழுது கூட வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கலை குறி வைத்துள்ளது இதனால் தற்போது ரசிகர்களும் மக்களும் செம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது சிறிது ஓய்வு எடுத்துக்கொள்வது அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் அந்த ஓய்வு நேரங்களில் எதையாவது செய்து அசத்துவார்கள். அது ஓய்வு நேரம் என்று கூட சொல்லமுடியாது ஏனென்றால் அந்த நேரத்திலும் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், சமையல், போட்டோஷூட் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது அஜீத்தின் வழக்கம்.

அந்த வகையில் வலிமை படம் முடிந்த கையோடு அஜீத் தற்போது ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் தாஜ்மஹால் சென்று அங்கு தனது ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மேலும் டெல்லியில் அஜித் அங்கு பைக்கில் உலகம் சுற்றும் மாரல் யாஜர்லு என்ற பெண்ணை நேரில் சந்தித்து போட்டோஷூட் எடுத்ததோடு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலானது.

மேலும் ஒரு தடவை இருவரும் சந்தித்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார் உலகம் சுற்றும் பெண்னான மாரல். சமீபத்தில் எடுத்த புகைப்படம் குறித்து அவர் பேசியுள்ளார். அஜித்குமார் மிகப் பெரிய நடிகர் என்பதை கூகுள் மூலம் தேடி பார்த்து தெரிந்து கொண்டேன் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நான் அவரை சந்தித்த போது எடுத்த புகைப்படம் வைத்து தெரிந்தது.

ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் எளிமையான மனிதராக பழகுகிறார். அஜித் மிக தன்னடக்கம் ஆக பேசுகிறார் மரியாதைக்குரிய மனிதர். மிகச்சிறந்த மனிதர் அவர் சமூகவலைதளத்தில் இல்லை அதனால் அவரது சுதந்திரத்தில் நாம் தலையிடக் கூடாது என்பதால் அவரது அனுமதி பெற்ற பின்னரே அந்த புகைப்படத்தை பகிர்ந்தேன் எனவும் கூறினார்.