ஒரே ஒரு படம் தான் விஜய் சேதுபதியுடன் நடித்தது.! 17 வயது நடிகைக்கு அடித்த பம்பர் ஜாக்பாட்.!

vijaysethupathi
vijaysethupathivijaysethupathi

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டு தற்பொழுது வில்லன் கேரக்டரில் அசத்தி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

தற்பொழுது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லன் கேரக்டரில் நடிப்பதை ஆர்வமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி  இருந்தார்.

தற்பொழுது இவர் நடித்த தெலுங்கு திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த இளம் நடிகைக்கு தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் உப்பண்ணா. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இதில் புதுமுக நடிகைகள், நடிகர்கள் நடித்து இருந்தாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படம் ரிலீஸ்சாகி மூன்றே நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் இளம் நடிகைக்கு அப்பா வேடத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இப்படத்தில் ஹீரோயினியாக நடிகை கீர்த்தி ரெட்டி நடித்து இருந்தார். இவருக்கு தற்போது தான் 17 வயது ஆகிறது பள்ளிப்பருவ குழந்தையாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தான் இருந்தார்.

தற்பொழுது கீர்த்தி ரெட்டிக்கு தமிழ்,தெலுங்கு என்று மாறி மாறி பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் மிகவும் அழகாக உள்ளதால் பல இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.