பல நடிகர்களின் காதல் வலையிலிருந்து நழுவிய ஒரே நடிகையை இவர்தான்..! பயில்வான் ரங்கநாதன் புகழாரம்

பல நடிகர்களின் காதல் வலையில் இருந்து எஸ்கேப் ஆன ஒரே நடிகை இவர் தான் என பயில்வான் ரங்கநாதன் ஒரு நடிகை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளை பற்றி  நமக்கு தெரியாத விஷயங்களை சொல்லி வருகிறார் அது பெரிய அளவில் சர்ச்சையில் முடிகின்றன.

அப்படி அண்மையில் இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரை விமர்சித்திருந்தார். இதற்கு நடிகை ரேகா நாயர் நடுரோட்டில் பயில்வான் ரங்கநாதனை நிற்க வைத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தற்பொழுதும் கூட இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ரங்கநாதன் நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார். அந்த வகையில் பல நடிகர்களின் காதல் வலையில் இருந்து எஸ்கேப் ஆன  ஒரு நடிகை பற்றி அவர் பேசி உள்ளார் அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை சுவலட்சுமி தான்.. இவர் தமிழில் மொத்தமாக 13 படங்கள் தான் நடித்தார்.

அதில் 7 படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறின. நடிகை சுவலட்சுமி படங்களில் சேலையை கட்டிக் கொண்டு பெரிதும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார். மேலும் கமலஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்துவிட்டார். அதேபோல ரஜினி படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார்.

suvalaxmi
suvalaxmi

பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய போதும் அதை அறுத்துக் கொண்டு வெளியே வந்தார் நடிகர் கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகள் அத்தனை பேரையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்து விடுவார் ஆனால் கார்த்தியின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி அந்த அளவிற்கு டீசன்டான நடித்தவர் சுவலட்சுமி என பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

Leave a Comment