ஒருவாரத்திற்கு நின்று அடிக்கப்போகும் மழை.! உஷார் மக்களே.!

0

கடந்த ஆறு நாட்களுக்கு மேல் மழை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது, இந்தநிலையில் அரபிக்கடல் பகுதியில் கியர், மகா என இரு புயல்கள் உருவாகி உள்ளன இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்து வருகிறது, இந்தநிலையில் அரபிக்கடல் பகுதியில் ஒரே சமயத்தில் இரண்டு புயல்கள் உருவாகியுள்ளன அதனால் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது, இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அரபிக்கடலில் இன்று லட்சத்தீவு பகுதியின் மீது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  நிலவுகிறது இது அமினி தீவிற்கு 40 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு புதுச்சேரியில் பெய்த மழையின் அளவை பற்றி பேசிய அவர். அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், நாமக்கல், திருப்பூர், ஆகிய இடங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார்கள். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.