ஒருவழியாக பைக் ரைடு முடிச்சி – தீபாவளிக்கு வீட்டுக்கு வந்த தல.! மனைவியுடன் அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஒருவர் தல அஜித். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் ஆக்சன் திரைப்படங்களில் நடித்தது அசத்தினார். இது அவருக்கு வெற்றியை கொடுத்தது. தற்போது  அதுபோன்ற படங்களில் பெரிதும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கூட ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என பலரின் கருத்தாக இருந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தனது 62வது திரைப்படத்திலும் பணியாற்ற ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனரை கூட தேர்வு  செய்து விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. எப்படி இருந்தாலும் இன்னும் படத்தில் கமிட் ஆகாமல் தற்போது இந்தியாவை சுற்றி அவர் பைக்கில் வலம் வந்த புகைப்படங்கள் வெளியாகி வந்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு பல பிரபலங்கள் தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர் .

இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் வருமா என பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அஜித்தின் ரசிகர் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவியது.

மேலும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதை பார்த்த ரசிகர்கள் நீங்க செம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்டுகளை தெரிக்க விடுகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith
ajith

Leave a Comment