நாம் யாரிடமும் இல்லாத ஒன்று.. விஜய் கிட்ட இருக்கு அதுதான் “அந்த சூப்பர் பவர்” – பீஸ்ட் பட வில்லன் ஷைன் டாம் பேட்டி.

vijay
vijay

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆக்ஷன் சென்டிமென்ட் திரில்லர் என அனைத்து விதமான படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர் தளபதி விஜய். எனினும் சமீப காலமாக ஆக்ஷன் திரைப்படங்கள் எதிர்பாரத அளவுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் வேட்டை திரைப்படங்கள் எல்லா வரவேற்பை பெறுவதால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனால் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து தொடர்ந்து தளபதி விஜய்ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் கூட நெல்சன் முதல்முறையாக கைகோர்த்து  பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் ஒரு வழியாக ஏப்ரல் 13-ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன்பாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது படக்குழு அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா என அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் பட வில்லன் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது  : என்னுடைய அம்மா பீஸ்ட் படப்பிடிப்பிற்கு வந்தார்கள் அவர்களிடம் விஜய் சாரிடம் ஒரு விஷயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறி அவர் எப்போதும் அமைதியாகவே உள்ளவர் கோபம் கொண்ட இதுநாள் வரை பார்க்கவில்லை என்றார்.

உடனே எனது அம்மா இது பற்றி அவரிடம் கேட்டார் நானும் சாதாரண மனிதன் தான் எனக்கும் கோபம் வரும் ஆனால் அதை கட்டுப் படுத்திக் கொள்வேன் என கூறினார் விஜய். அதிகாரமும், பணமும் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல விஜய் அவர்களிடம் ஒரு சூப்பர் பவர் உள்ளது என பெருமையாக பேசினார் ஷைன் டாம்.