இயக்குனர் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்திற்கு பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனது தம்பியான தனுஷை வைத்து எடுக்க முடிவெடுத்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் பார்த்திபன் நடுத்திருந்த சோழ மன்னன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது தனுஷ் இந்த திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் மேலும் இந்த திரைப்படம் 2024 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்வராகவன் மற்றும் தனுஷின் ரசிகர் ஒருவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் போஸ்டர் ஒன்றை தாமாகவே உருவாக்கி ட்விட்டரில் செல்வராகவன் மற்றும் தனுஷை டேக் செய்து வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த செல்வராகவன் அதற்கு லைக்கு களை போட்டுள்ளார். தற்போது அந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
