தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கடைசிநாள் அன்று.. நடந்த விஷயங்களை பல வருடங்கள் கழித்து பகிர்ந்த அஸ்வின்! சோகமான ரசிகர்கள்

இந்திய அணியில் சச்சின் ஷேவாக் கங்குலி போன்ற தலைசிறந்த வீரர்களுக்கு வீரர்கள் போன பின்பு இந்திய அணியை மிக சிறப்பாக தலை நிமிர்த்தி பல வெற்றிகளை குவித்து அசத்திய இவர் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக அறிமுகமாகி இருந்தாலும் திறமையின் மூலம் படிப்படியாக கேப்டன் பொறுப்பை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கைப்பற்றினார்.

இவர் கேப்டன் பொறுப்பில் இருக்கும் போது இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று அசத்தியுள்ளது அந்த வகையில் 2007ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை கைப்பற்றியது அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆசிய கோப்பை என அனைத்து கோப்புகளையும் தோனி பெற்றுக்கொடுத்தார். ஐபிஎல் லில் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி நான்கு முறை கோப்பைகளை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் 2019ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.அப்போது நடந்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார் அஸ்வின். மகேந்திர சிங் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதுவரை டெஸ்டில் 4777 ரன்களை குவித்துள்ளார் இதில் 6 சதங்கள் 33 அரை சதங்கள் அடங்கும் கடைசி போட்டியின் பொழுது  தோனியுடன் இருந்தது குறித்து பகிர்ந்துள்ளார் அஸ்வின். 2014 ஆம் ஆண்டு மெல்போர்ன் போட்டியில் தோல்வியை தவிர்க்க நானும் தோனியும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம் இருப்பினும் அந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடையவே அந்த ஸ்ட்ம்புகளை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினார்.

மாலை நான் சுரேஷ் ரெய்னா இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் தோனியின் அறையிலிருந்தும் அன்று இரவு முழுவதும் தோனி தான் அணிந்து அந்த ஜேர்சியை கழட்டவே இல்லை. அந்த ஜெர்சியின் மீது சில கண்ணீர் துளிகளும் சிந்தியிருந்தன என அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Comment