ஜனவரி 26 இணையதளமே தெறிக்க போகுது.! லீக்கான தளபதி 67 அப்டேட்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

0
thalapathy-67
thalapathy-67

நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

கொடைக்கானலில் தொடங்க உள்ள காட்சிகளில் முதல் பத்து நாட்களில் விஜய் மற்றும் மிஸ்கின் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இவர்களுடைய காட்சி படமாக்கப்பட்ட பிறகு மற்ற நடிகர்களின் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது கொடைக்கானலில் மட்டும் 60 நாட்கள் தளபதி 67 திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்றும் மகளாக ஜனனி நடிக்கிறார் என்றும் சில தகவல் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட்டிர்க்காக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் லீக் ஆகி இருக்கிறது இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதாவது தளபதி 67 திரைப்படம் எல் சி யு வில் இணைய உள்ளதால் விக்ரம் படத்தின் அப்டேட் எப்படி வெளியானதோ, அதே போல தான் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது விக்ரம் படத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தின் வீடியோவுடன் ஒரு அப்டேட் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதே போல தான் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் ப்ரோமோ வீடியோவாக வெளியாகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த பிரமோ வீடியோ வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகம் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் லீக்காகி இருக்கிறது இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.