பழசா இருந்தாலும் டி ஆர் பி-யில் கிங் என நிரூபித்த சன் தொலைக்காட்சி.! தங்கம் எப்பவும் ஜொலிக்க தான் செய்யும்.

கொரோனா என்னும் அரக்கனுக்கு உலக நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து விதமான படப்பிடிப்பு மற்றும் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, இதனால் சினிமாத்துறை மிகவும் அடி வாங்கியுள்ளது, மற்றொரு புறம் சின்னத்திரை முடக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சூட்டிங் எங்கும் நடைபெறாததால் புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் என அனைத்தும் ஒளிபரப்ப முடியாமல் போய்விட்டது.

அதனால் தொலைக் காட்சிகள் அனைத்தும் டி ஆர் பி எல் அடிவாங்கும் என தெரிந்து பழைய சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள் சின்னத்திரை தொலைக்காட்சிகள், அப்படி சன் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, அதேபோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மெட்டிஓலி சீரியலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்படி மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது, barc india ( broadcast audience research council ) இதை பார்த்து வாயடைத்துப் போய்விட்டது, அதேபோல் ரசிகர்களின் அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்ததில் சக்திமான் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. சக்திமான் சீரியல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு முதலிடத்தையும் அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தங்கம் மற்றும் மெட்டிஒலி சீரியல் அதிக பார்வைகளை கடந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version