சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த லட்சுமியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.! வெள்ளை முடியுடன் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

lakshmi : நடிகை லட்சுமி தமிழ் திரைப்பட நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் இவர் சினிமாவில் முதன் முதலில் இயக்குனர் மல்லியம் ராஜகோபால் என்பவரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், இவர் நடித்த முதல் திரைப்படம் ஜீவானம்சம், இந்த திரைப்படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது.

நடிகை லட்சுமியின் தந்தை மற்றும் தாய் சினிமாவில் பணியாற்றியவர்கள் தான் அதனால் எளிதாக சினிமாத்துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார், இவர் 1970 ஆம் ஆண்டு நான்கு தென்னிந்திய மொழிகளில் தனது வெற்றிக் கொடியை நாட்டினார் அதனால் இவருக்கு ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

நடிகை லட்சுமி தன்னுடைய 17 வயதிலேயே பெற்றோர்களால் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு  1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை பிறந்தது, ஆனால் இவர்களின் திருமணம் பின்பு முறிவில் முடிந்தது. ஆனால் தன்னுடைய மகளை வளர்க்கும் உரிமையை போராடி பெற்றார்.

பின்பு உயிர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகரும் இயக்குனருமான சிவசந்திரன் என்பவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார், இவர் கடைசியாக ஓ பேபி படத்தில் நடித்திருந்தார், இப்படி பல சூழ்நிலையை கடந்து வந்த லக்ஷ்மியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் வெள்ளை முடியுடன் லட்சுமி இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

lakshmi

Leave a Comment

Exit mobile version