அட இனி எதுக்கு கார் வாங்கணும்.! ஓலாவின் புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி.!

0
ola
ola

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களில் மிகவும் அவசியமாக மாறிவிட்டது கார், குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அனைவரும் சொகுசாக செல்வதற்காகவும் கார் அவசியமாக மாறிவிட்டது.

ஓலா மற்றும் உபர் நிறுவனங்களால் கார் உற்பத்தி துறையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது, இந்த நிலையில் இனி காரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஓலா நிறுவனம், இதனால் மக்கள் மிகப் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அதாவது செல்ஃப் டிரைவிங் கார், நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே 2000 பணத்தை டெபாசிட் செய்து விட்டு உங்களுக்கு பிடித்த காரை எடுத்துச் செல்லலாம், இந்த சேவையை ஓலா நிறுவனம் முதற்கட்டமாக அக்டோபர் 17-ம் தேதி முதல் பெங்களூரில் தொடங்கி இருப்பதாகவும். அடுத்த கட்டமாக 2020க்குள் 20,000 காருக்கு மேல் இறக்கி இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்.

மேலும் முக்கிய குடியிருப்புகள் நகரின் முக்கிய பகுதிகளில் இருக்கும் சேவை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை வாடிக்கையாளர்கள் இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.