ஆண்டவரையே அதட்டிப் பேசிய ஆயிஷா..! அடுத்த ஆப்பு உனக்கு தான் கண்ணே..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வது மட்டுமில்லாமல் இந்த வீட்டிற்குள் தனித்தனியாக கேங்க் உருவாவது வழக்கம்தான்.

அந்த வகையில் இரண்டு பிரிவாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார்கள் அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாகவே அசிம் மற்றும் அவரது கேங்கில் உள்ளவர்களை தான் கமலஹாசன் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதிலும் அசிம் சொல்வதை அப்படியே கேட்கும் ஆயிஷாவை கமலஹாசன் செம கலாய் கலாய்த்து உள்ளார்.

அந்த வகையில் பொம்மை டாஸ்க்கில் விளையாட மாட்டேன் என்று கூறிவிட்டு அதன் பிறகு எதற்காக ரட்சிதா பொம்மையை நீங்கள் கையில் எடுத்தீர்கள் என கமலஹாசன் சரியான கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல் இதற்கு ஆயிஷா கமலிடம் மிகவும் கோபமாக பதில் கூறியுள்ளார்.

மேலும் என்னை அப்படி வெளியே போர்ட்ரி பண்ணிடாதீங்க என கமலை பார்த்து கோபமாக அவர் கூறியது மட்டும் இல்லாமல் கமல் மக்கள் பக்கம் திரும்பி கையை காட்டி நகைத்தார். இதனை தொடர்ந்து நடிகர் கமல் அவர்கள் வேற யாராவது அழனுமா அல்லது பேசணுமா என இறுதியில் ஆயிஷாவை நக்கல் செய்யும் அளவிற்கு கமலஹாசன் பேசி இருப்பார்.

மேலும் ஆயிஷா இப்படி கேவலமாக கமலிடம் நடந்து கொண்டது பலருக்கும் பேசும் பொருளாக மாறியது மட்டும் இல்லாமல் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது அனேகமாக அடுத்த வாரம் ஆயிஷா எலிமினேட் ஆவதற்கு அதிக அளவு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் பலரும் ஆயிஷாவை வெளியே அனுப்பிவிடலாம் ஏனெனில் அவர் பிக் பாஸ் வீட்டில் விளையாட வரவில்லை அசீமுக்கு பணிவடை செய்ய தான் இங்கு வந்துள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/VCDtweets/status/1586773568787980288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586773568787980288%7Ctwgr%5E45e2c77fca8edf829017e30c1ad5e0f007d5a4a4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fbb-ayesha-angry-conversation-with-kamalhaasan-1667222575

Leave a Comment

Exit mobile version