அட நம்ப அஜித்தா இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் நடந்து போவது.! யாருமே கண்டு பிடிக்கலையே வைரலாகும் வீடியோ…

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல திறமைகளை கொண்டவர். இவர் தற்பொழுது ஏ கே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பாதையில் கிடப்பில் போட்டு விட்டனர். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார்  பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் நடிகர் அஜித்குமார் தனது நண்பர்களுடன் லடாக்கிற்கு பயணம் செய்துள்ளார். லடாக்கில் இருந்து அவருடைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார்  ஹெலிகாப்டரில் காக்பீட்டுக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படமும். அவர் ஹெலிகாப்டரை நோக்கி  செல்லும் சிறு வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் தனது 61வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தனது சாகச பயணத்தை விரைவில் முடிக்க உள்ளதாக திட்டமிட்டு உள்ளார். அஜித்தின் 61வது திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை பாங்காங்கில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில்  லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் பைக் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் இன்று நடிகர் அஜித் குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதன் பிறகு நடிகர் அஜித்குமார் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகிய ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அஜித் உடன் பைக்கில் உலகம் சுற்றுபவர்களில் சுப்புராஜ் ஒருவர். இவர் நடிகர் அஜித் உடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது சுப்புராஜ் அவர்கள் அஜித் குமார் அடுத்ததாக எங்கே செல்கிறார் எங்கே தொடங்க உள்ளார் என்று பதிவு செய்து உள்ளார்.

இதோ அந்த பதிவு.

மேலும் நடிகர் அஜித்குமார் முக கவசம் அணிந்து கொண்டு நடந்து செல்லும் சிறு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment