ஹரிஷ் கல்யாணுடன் நடிகை ப்ரியாபாவனி ஷங்கர்..! படபிடிப்புதளத்தில் இருந்து லீக்கான புகைப்படங்கள்..!

oh manapenne movie stills: கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் பெல்லி செப்பள்ளோ இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்திருப்பார். இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் 2016ஆம் ஆண்டு கைப்பற்றி விட்டார். மேலும் இதனை தானே தயாரித்து வெளியிட போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அந்தவகையில் இவர் இந்த திரைப்படத்திற்கு தமிழில் வைத்த பெயர்தான் பொன்னொன்று கண்டேன்  இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருந்தார் ஆனால் பின்னர் சில பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஆனது தற்போது மிக தீவிரமாக இந்த திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளது. மேலும் சமீபத்தில் இந்த திரைப்படமானது ரீலிஸ்க்கும் காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணம் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு இந்த புதிய குழு ஓமனபெண்ணே என்ற பெயரில் இந்த படத்தை வெளியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு விறுவிறுப்பாக படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment