படம் வெற்றி பெற்றது என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த PS2 படக்குழு.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். இவர் இயக்கிய முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக சுமார் ரூ.500 கோடியை தொட்டு விட்டது என்று தகவல் வெளியானது.

மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் பல சினிமா பிரபலங்களும் தங்களது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தினார்கள்.அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட உலக அளவில் சுமார் ரூ.300 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகின.

ஆனால் முதல் பாகம் உலக அளவில் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதால் இந்த முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகம் முறியடிக்க முடியாது என்று பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்தும் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மேலும் இந்த இரண்டாம் பாகம் தற்போது மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டு இருந்தாலும் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருவதால் பல ரசிகர்களும் இனிமேல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வசூல் குறைய தொடங்கிவிடும் என்றும் கூறிவரும் நிலையில் தற்பொழுது இந்த இரண்டாம் பாகம் வின்னர் என்று இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ரூ.300 கோடியை தொட்டு விட்டதால் இந்த படம் ஹிட் கொடுத்து விட்டது என்று நாங்கள் நினைக்கிறோம் என்றும் அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் எந்த கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கப் போகிறார் என்பது பற்றி அப்டேட் இருந்தால் கொடுங்கள் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் .

Leave a Comment