சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.. இணையதளத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஜொலிக்க முடியும் அந்த வகையில் நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் ஹீரோவாக தொடர்ந்து பெற்று படங்களை கொடுத்தார் ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி படங்களாக போனாதால் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

இதனால் மற்ற படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை மேலும் உடல் எடை அதிகமானது இதனால் சிம்புவின் சினிமா கேரியர் குலோஸ் என சொல்லப்பட்டது ஆனால் தனது எண்ணங்களை மாற்றி உடல் எடையை குறைத்து புது அவதாரம் எடுத்து தற்போது வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான்.. பத்து தல இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்தது அசத்தியது. இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன்..

கௌதம் கார்த்தி என பல திரைப் பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். பத்து தல படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்து பெரிய அளவில் பேச்சைக்கள் வெளிவந்தன ஒரு வழியாக அதற்கான விடை கிடைத்துள்ளது கடந்த சில வருடங்களாக உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வரிசையில் இன்னும் ஒரு ஹிட் படத்தை சேர்க்க  சிம்பு நடிக்கும் படத்தை உலகநாயகன் கமலஹாசன் தயாரிக்கும் உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment