விருமாண்டி பட அபிராமி மீண்டும் சீரியலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! அதுவும் எந்த மொழியில் தெரியுமா.?

தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் அபிராமி இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து சமுத்திரம்,தோஸ்த்,மிடில் கிளாஸ் மாதவன்,விருமாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவ்வாறு நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவரது கைவரிசையை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாலினியாக வலம் வந்து சீரியல் நடிகையாகவும் வலம் வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று இந்நிலையில் இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஆம் இவர் மலையாளத்தில் உருவாகும் ஒரு புதிய சீரியலில் நடிக்க உள்ளார் அதற்கான அதிகாரப்பூர்வ வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் மீண்டும் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இதனையடுத்து இவர் சீரியலில் நடிக்கிறார் என்ற வீடியோ காணொளி வெளியானதால் இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment