பில்லா பட இயக்குனர் இயக்கும் அடுத்த திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0

தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்கள் இறந்தாலும் அவர்களது வாரிசுகள் அவர்களை அடுத்து நடித்த வருவார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் முரளி இறந்தாலும் அவரது மகன் அதர்வா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் அதர்வா நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி,100,பூமராங்,பானா காத்தாடி,இரும்புக்குதிரை போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளியை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளாராம் மேலும் அந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நாங்கள் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் இரண்டாவது திரைப்படம் அமோக வெற்றி அடையும் என கூறியது மட்டுமல்லாமல் விஷ்ணுவர்தன் இருக்குவதால் நாங்கள் எதற்கும் அஞ்சாமல் இருப்போம் எனவும் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் ஆகாஷ் முரளி நடிக்கும் இப்படத்தில் இவருடன் இணைந்து யார் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

அதுமட்டுமல்லாமல் விஷ்ணுவர்தன் ஒரு திரைப்படத்தில் கை வைத்து விட்டால் அந்தத் திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என்பதை பில்லா திரைப்படத்தில் காட்டி இருப்பார்.