வெளியான பல திரைப்படங்களில் வெறும் நான்கு திரைப்படம் மட்டுமே வெற்றி.! பிரபு சாலமன் அதிரடி முடிவு.

0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 14-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி அதில் நான்கு படங்கள் மட்டுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

1999ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரபுசாலமன். இவர் தமிழ் திரைத்துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவர் முதன்முதலில் காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கிய அகத்தியன் அவர்களின் உதவி இயக்குனராக தனது ரியரை தொடங்கினார்.

இதன் மூலம் இயக்குனர், எழுத்தாளர்,தயாரிப்பாளர் என தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி,தெலுங்கு போன்றவற்றிலும் பணியாற்றிவுள்ளார்.

கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து கிங் படத்தை இயக்கினார்.இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து கரணை வைத்து கொக்கி மற்றும் லீ என்ற படத்தை எடுத்தார். இந்த இரண்டு படங்களும்  ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

அதன் பிறகு தான் நடிகை அமலா பாலை வைத்து மைனா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தான் இவர் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. இப்படத்தின் மூலம் பல விருதுகளையும் பெற்றார்.

prabusolomon
prabusolomon

இந்த நிலையில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளாராம். இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளாராம் பிரபுசாலமன். இப்படத்தில் புதிய முக நடிகர்களும் அறிமுகமாகிறார்கள். இவர் இயக்குனராக சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை எனவே நடிகராக போவது தனது முத்திரையை பதிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.