சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட இவர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்காரா, வெற்றிமாறன் என சிறந்த இயக்குனர்களிடமும் கைகோர்த்து பணியாற்ற இருக்கிறார்.
சூர்யா ஒரு பக்கம் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறு பக்கம் அவர் தம்பி கார்த்தியும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அவரது கையில் தற்பொழுது கூட விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அண்மையில் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோளாக்கலமாக நடந்து அரங்கேறியது. விருமன் படத்தை சூர்யா அவர்கள் தயாரித்து உள்ளார்.
முத்தையா இயக்கியுள்ளார் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்த உள்ளார் மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் சொன்னது. சூரறை போற்று படத்தின் ஷூட்டிங்கிலேயே சூர்யாவிடம் சொன்னேன் உங்களுக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று..

அதேபோல நடந்தது இப்பொழுதும் அதை தான் சொல்கிறேன் அடுத்த தேசிய விருது கார்த்தி உங்களுக்கு தான் விருமன் படத்தில் நீங்களும் பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகப் பிரமாதமாக இருக்கிறது அதற்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என அடித்து கூறி உள்ளார்.

நிச்சயமாக அது நடக்கப்போகிறது என மேடையில் அவர் பகிரங்கமாக சொன்னது பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது ஒரு நடிகரே இப்படி விருமன் படத்தை புகழ்ந்து பேசுவதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது.