பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. இதுவரை அதிக வசூலை அள்ளிய திரைப்படம் எது.? துணிவா.. வாரிசா..

0
thunivu and varisu
thunivu and varisu

இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் மோதுவது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், வசூல் ரீதியாக இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவது வழக்கம்.. இதை உணர்ந்து கொண்ட டாப் நடிகர் சமீப காலமாக சோலோவாக படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இருப்பினும் சில எதிர்பாராத விதமாக மோதுவது வழக்கம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11ஆம் தேதி நேருக்கு நேர் மோதின.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அஜித் விஜய் இருவரின் படங்களில் முதலில் அஜித்தின் கை தான் ஓங்கி இருந்தது.

இதிலும் அஜித் கை ஓங்குமென எதிர்பார்க்கப்பட்டது அது தற்பொழுது நடந்து கொண்டும் இருக்கிறது தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படம் ஆக்சன் காமெடி செண்டிமெண்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வசூலில் சூத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து வருகின்றனர். இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் தொடர்ந்து வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் 15 நாட்கள் முடிவில்..

இரண்டு திரைப்படங்களும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அஜித்தின் துணிவு திரைப்படம் 15 நாள் முடிவில் 118 கோடியும்,  விஜயின் வாரிசு திரைப்படம் 15 நாள் முடிவில் 119 கோடியும் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன