பொங்கல் மட்டுமல்ல தீபாவளியும் தல தீபாவளி தான்.! ஏ கே 62 திரைப்படத்திலிருந்து வெளியான அறிவிப்பால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்…

இயக்குனர் ஹெச் வினோத்துடன் இணைத்து துணிவு திரைப்படத்தில் நடித்திருந்த அஜித்குமார் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இதனால் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாமதமாகி கொண்டே இருக்கும் நிலையில் ஒரு அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதாவது ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் மட்டுமல்ல தீபாவளியும் தல தீபாவளி தான் என்பது போல ஏ கே 62 திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிட பட குழு முடிவு செய்து இருப்பதாக தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு இந்த படத்தை மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்திற்கு பிஎஸ் மித்ரன் அவர்கள் கதை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஏகே 62 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படாத நிலையில் அடுத்த கட்ட அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அறிவிப்பு நேரடியாக டைட்டில் பிரமோவாகத்தான் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அந்த டைட்டில் பிரமோவில் ஏகே 62 திரைப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தீபாவளிக்கு ஏகே 62 திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment