ஒன்றல்ல இரண்டல்ல காலேஜில் 17 அரியர் வைத்த நடிகர் சிவகர்த்திகேயன்..! கடைசியில் பாஸ் பண்ணது இப்படித்தான்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவர் தொகுப்பாளராக பணியாற்றி அவரது விடா முயற்சியால் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினிமுருகன், நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான் தான் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல்  சுமார் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து sk 20 என்ற திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளது.

அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் அடுத்த sk 21 திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தின் இயக்குனராக ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் அவரது கல்லூரி வாழ்க்கையும் பற்றி ஒரு சில தகவல் கூறினார். அது என்னவென்றால் அவர் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் 17 அரியர் வைத்துள்ளார்.

இந்த விஷயம் மட்டும் வீட்டுக்கு தெரிந்தால் என்னை அடிச்சு வீட்டைவிட்டு துரத்தி விடுவாங்க என்று யோசித்து அவரது  கிளாஸ் பெண்களிடம் சொல்லித்தர சொல்லி படித்து 17 அறியாரையும்  கிளியர் பண்ணி விட்டாராம்.

Leave a Comment

Exit mobile version