“வாரிசு படம்” பொங்கலுக்கு கிடையாது.? ரிலீஸ் தேதியை தள்ளிபோடும் படக்குழு..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

0
varisu-
varisu-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் அண்மைக்காலமாக வெற்றி படமாக இருந்து வருகிறது. ஏன் இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இது விஜய்க்கு 65 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருவதாக படக்குழு மற்றும் படத்தில் நடித்த சரத்குமார் கூட தெரிவித்தார்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளது.

அதிலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக சொல்லியது ஆனால் தற்பொழுது வந்துள்ள தகவல் படி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது காரணம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறதாம்.

இதனால் வாரிசு திரைப்படம் பொங்கல் முடிந்து 45 நாட்கள் கழித்து தான் படம் ரிலீஸ் ஆகும் என தெரிய வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை அப்படி வாரிசு பொங்கலுக்கு வெளியானால் முதல் நாள் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன