தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்கல.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் விஜய்..! துணிவு படத்தை விட பல மடங்கு வியாபாரம் செய்த வாரிசு

0
thunivu and varisu
thunivu and varisu

ரஜினி – கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாஸ் ஹீரோக்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே ஒரு படத்தை அஜித் விஜய் கொடுக்க இருக்கின்றனர்.

ஆம் அதுவும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன. 8 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேராக மோத உள்ளதால் ரசிகர்கள் இந்த படங்களை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் படம் வெளிவர இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு..

மேல் இருந்தாலும் ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழ்நாட்டு வெளியீடு உரிமையை கைப்பற்றி உள்ளது.

இதனால் தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்குகள் துணிவுக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதாவது வாரிசு படத்தின் ஒத்துபட்ட த்ரையங்கை விட  100 திரையரங்குகள் துணிவுக்கு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இல்லை என்றால் பரவாயில்லை வெளிநாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியிட வாரிசு முனைப்பு காட்டி வருகிறது.

விஜய்க்கு தமிழ்நாட்டை போல வெளிநாட்டிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால் வெளிநாட்டில் அதிக திரையரங்குகளை கைப்பற்ற படக்குழு முனைப்பு காட்டி வருகிறதாம்.  இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாட்டுகளில் வாரிசு படத்தை 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர் அதற்கு எதிர்மறாக துணிவு திரைப்படம் வெறும் 13 கோடிக்கு மட்டுமே வியாபாரம் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாட்டில் விஜயின் கை ஓங்கி இருக்கிறது என சொல்லாமல் சொல்லுகிறது தகவல்..