அஜித்தின் இந்த குணம் வேறு எந்த ஒரு நடிகருக்குமே கிடையாது.? அடிச்சு சொல்லும் நடிகர் பாண்டு.!

நடிகர் அஜித் அண்மைகாலமாக ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படத்தை தொடர்ந்து  தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு  தொடங்கப்பட இருக்கிறது. இதற்க்கிடையில் அஜித் தற்போது ஐரோப்பிய நாடு பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் வெகு விரைவிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, அஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய் நயன்தாராவின் கணவன் விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62வது திரைப்படத்தில் அஜித் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இப்படி அஜித் அடுத்த அடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் அஜித் பற்றிய செய்திகளும் இணையதள பக்கத்தில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பாண்டுரங்கன். இவர் அஜித்துடன் இணைந்து 8க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. சினிமா உலகில் அஜித்தை போன்ற ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. எங்கு வேண்டுமானாலும் உண்மையை பேசலாம் ஆனால் சினிமா உலகில் உண்மையை பேசினால் காணாமல் போய்விடுவார்கள். அது தெரிஞ்சும் அஜித் சினிமா உலகில் உண்மையை பேசுகிறார் அவர் ஒரு அற்புதமான மனிதர் என கூறி புகழ்ந்து பேசினார் பாண்டுரங்கம்.

Leave a Comment

Exit mobile version