நடிகர் தனுஷ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வந்தாலும், நிஜ வாழ்க்கையில் இப்பொழுது சறுக்கலை சந்தித்து உள்ளார் அதனால் தனுஷ் பற்றிய பேச்சி இணையதளங்களில் வேகமாக வந்த வண்ணமே இருக்கின்றன. நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து 18 வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து போவதாக அறிவித்த செய்தியை பூதாகரமாக வெடித்தது.
அதிலிருந்து தனுஷை குறை சொல்லி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது ரஜினியின் மருமகன் என்பதால் தான் நீங்கள் சினிமாவில் வளர்ந்து உள்ளீர்கள் என ஒரு செய்தி பூதாகரமாக வெடித்துள்ளது அதற்கு தன்னுடைய ஸ்டைலில் தனுஷ் பதில் அளித்துள்ளார்.
தனுஷ் முதலில் தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் அவரது அண்ணன் செல்வராகவன்னுடன் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வளர்ந்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிறப்பான படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
தனுஷ் ஆரம்பத்தில் அவரது அப்பா, அண்ணன் மூலமாகத் தான் வளர்ந்தார் ஆனால் திறமை மூலம் தற்போது உச்ச நட்சத்திரமாக மாதிரி உள்ளாரே தவிர வேறு யாரும் காரணம் இல்லை ரஜினியின் மருமகன் என்ற ஒரு அந்தஸ்தை கொடுத்தது தவிர வளர்த்துவிட்டது யாரும் இல்லை என கூறி உள்ளார் தனுஷ்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரஜினியின் பொல்லாதவன், படிக்காதவன், தங்க மகன் ஆகிய படங்களின் பெயரை டைட்டிலாக வைத்து தான் வளர்ச்சி அடைந்தாகவும், அதற்கு முக்கிய காரணம் ரஜினி என பலரும் கூறி வருகின்றனர்.