லியோ படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.. ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை பகிர்ந்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் “லியோ” திரைப்படம் உருவாகி வருகிறது.

முதல் கட்ட சூட்டிங்கை சென்னையில் சைலண்டாக நடத்திய படக்குழு அடுத்ததாக காஷ்மீருக்கு பறந்தது அங்கு தொடர்ந்து கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படக்குழு விறுவிறுப்பாக வேலை செய்து வருகிறதாம்.. லியோ படத்தில் விஜய், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் லியோ படத்தில் தனக்கான காட்சிகளை முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் சொன்னது.. இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச் சிறப்பாக ஒரு ஸ்டன்ட் காட்சியை படமாக்கி உள்ளார்கள். துணை இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும், கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனை உடன் ஒரு பெரும் வீரனை போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான் அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன் என் அருமை தம்பி  விஜய் உடன் ஒரு நடிகன்னாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷமடைகிறேன் அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.. “லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என கூறியுள்ளார்.

Leave a Comment