நடிகர் அஜித் சினிமாவில் மிக பிஸியாக இருந்து வரும் ஒரு நடிகர். ஏனென்றால் இவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து கார் ரேஸ் பைக் ரேஸ் போன்ற தனக்கு பிடித்த சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருவதால் அவர் எப்பொழுதுமே பிசியாகவே இருந்து வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கூட எதிலும் கலந்து கொள்ள மாட்டார்.
தற்போது அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் இயக்குனர் ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை போனி கபுர் தயாரித்து வருகிறார். இந்த படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர்.
மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் வீரா, ஜான் கொக்கேன், அஜய் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலையை இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பக்கம் பார்த்து வருகிறார். படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி செய்து விட்டு லொகேஷன் மற்றும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.

இந்த படத்தை அதிகளவு பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மற்றும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என கூறப்பட்டது. அஜித்தின் 62 ஆவது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிக்க உள்ளார் என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முதல் சாய்ஸ் நயன்தாரா கிடையாதாம் ஐஸ்வர்யா ராய் என சொல்லப்படுகிறது.
இதற்கான பேச்சு வார்த்தையை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஐஸ்வர்யா ராய்யிடம் தான் நடத்தி உள்ளாராம். அவர் ஓகே சொல்லிவிட்டால் ஏ கே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் 13 வருடங்களுக்கு முன்பு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

