ஒரே ஒரு வசனம் தான் ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்த அஜித் ரசிகர்கள்.! வைரலாகும் போஸ்டர்

0

தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதேபோல் ரசிகை களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தநிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படத்தை வினோத் இயக்கினார் போனிகபூர் தான் தயாரித்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்கள் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சட்டரீதியாக அஜித் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தும் ஆண்கள் மத்தியில் பெண்கள் மீதான ஒரு நல்ல எண்ணத்தை அதிகரிக்க செய்துள்ளது, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வசூல் பெற்று வருகிறது.

அஜித் ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மதுரையும் ஒன்று, மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தான் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது, அஜித் #NoMeansNo என கோர்ட்டில் வாதாடி விட்டு வெற்றி பெற்று வெளியே வரும்போது பெண் காவலர் ஒருவர் கை கொடுப்பார்.

அந்த காட்சியுடன் போஸ்டர் அடித்து பெண்கள் தானே தலைகுனிந்து இருந்த நிலையை #NoMeansNo என்கிற வாதத்தில் தலை நிமிர செய்த எங்களின் #பாரதியே..! என போஸ்டர் அடித்து நகரின் முக்கிய பகுதியில் வைத்துள்ளது.