என்னை யார் குறை சொன்னாலும் பரவாயில்லை.. அந்த ஒரு விஷயத்தை மட்டும் நான் செய்யவே மாட்டேன் – சபதம் எடுத்த யாஷிகா.

yashika-anand
yashika-anand

நடிகை யாஷிகா ஆனந்த் முதலில் மாடல் அழகியாக வலம் வந்து பின்பு தமிழ் திரைப்படங்களான கவலைவேண்டாம் துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்பு இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர்.

ஆவார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர் அரைகுறை ஆடையில் வலம் வந்து பல இளம் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா உலகில் பெரிதும் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு சில முக்கிய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. அதில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்று இருந்தன.

இதனையடுத்து கடமையை செய், இவன் தான் உத்தமன், சல்பர் போன்ற முக்கிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆம் நடிகை யாஷிகா ஆனந்த் அவரது தோழியுடன் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த கார் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

yashika-anand
yashika-anand

மேலும் பல மாதங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் இவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவருடைய ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் ரசிகர்களுடன் அவ்வபோது பேசியும் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை யாஷிகா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது எனது உடலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து இருக்கிறது இனி எப்பொழுதுமே நான் காரோ, பைக்கோ ஓட்ட மாட்டேன் என்னிடம் இருந்த பைக்கை கூட தற்போது எனது சகோதரியிடம் கொடுத்து விட்டேன் என கூறியுள்ளார்.