இந்தியன் 2 படத்தை கைவிடும் எண்ணம் இல்லை !! லைக்கா நிறுவனம் அதிரடி அறிவிப்பு.

No idea dropping the Indian 2 movie!! Leica Announces: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன்2. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் எடுக்க ஆரம்பித்ததிலிருந்து ஏதாவது தடங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது அதனால் சூட்டிங் தள்ளிப்போனது. மேலும் அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஷூட்டிங்கில்  சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. அந்த இடத்தில் தற்செயலாக கிரேன் அருந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் இறந்து விட்டனர். இந்த சம்பவம் திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்தின் காரணமாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனம் இந்த படத்தை நிறுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி கசிந்து வருகிறது.

தற்ப்போது லைக்கா நிறுவனம் இந்தியன்2 மற்றும் பொன்னியின் செல்வன் படத்தை நிறுத்துவதாக இல்லை என்று கூறியுள்ளது. இதை அடுத்து லாக் டவுன் முடிந்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளது.

 

Leave a Comment