தளபதி படத்தில் நடிக்க “நோ” சொன்ன நடிகர் மம்முட்டி..! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் எத்தனையோ படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அதில் ஒரு சில படங்கள் இப்பொழுது பேசப்படுகிறது அந்த வகையில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியை வைத்து இவர் எடுத்த திரைப்படம் தளபதி இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக இருந்தாலும் இதில் சென்டிமென்ட், காதல் காட்சிகள் அதிகம் அமைந்திருந்தன ..

இதனால் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ரொம்ப பிடித்து ஓடியதால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படம் மகாபாரதம் என்னும் இதிகாசத்தினை மையமாக வைத்து தான் தளபதி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த படம் பற்றி ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது..

இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லும் பொழுது இந்த படத்தில்  ரொம்ப வித்தியாசமான உடல் மொழிக்கு நோ.. எப்பொழுதும் சாதாரணமாக இருப்பது போல நடிக்க வேண்டும் என கூறினார். இதை ரஜினியே பொன்னியின் செல்வன் மேடையில் வெளிப்படையாக தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் வெற்றி பெற மற்றொரு பிளசாக இருந்தவர் மம்முட்டி அவர் தேவா கதாபாத்திரத்தில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மத்தியில் பரபலம் அடைந்தார் இந்த படத்தில் ரஜினி, மம்முட்டி சந்திக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கைதட்ட வைத்தது இவர்கள் இருவர் நட்பும் அந்த படத்தில் சூப்பராக இருக்கும்..

தளபதி படத்தின் கதையை மம்முட்டி இடம் கூறும் போது அவருக்கு கதை சுத்தமாக பிடிக்கவில்லை.. இதனால் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் ஆனால் அவரின் நண்பரும் மலையாள இயக்குனருமான ஜோஷி தமிழ் ரசிகர்களிடம் நீங்கள் ரீச்சாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என அட்வைஸ் செய்திருக்கிறார் அதன் பிறகு தளபதி படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம்..

Leave a Comment